மதுரை மீனாட்சியைத் தேடி வந்த பச்சைக் கிளிகள்
பச்சைக் கிளியுடன் மதுரை மக்களுக்கு அருள் பாலித்து வரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிதாக 2 இருஅலெக்சாண்ட்ரியா வகை கிளிகள் வந்துள்ளன.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிளிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 17 கிளிகள் அங்கு உள்ளன.கோவிலில் இதற்காகவே தனி இடம் உண்டு.இந் நிலையில் கேரளாவிலிருந்து புதிதாக 2 அலெக்சாண்ட்ரியா வகை பச்சைக் கிளிகள் கோவிலுக்கு வந்துள்ளன.இந்த புதிய கிளிகளை இயற்கையான சூழலில் வளர்ப்பதற்குத் தேவையான ரூ. 3 லட்சம் செலவை ஏற்பதற்கு ஒருபக்தர் முன்வந்துள்ளார்.தெப்பத்தில் உலா வந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்மதுரையில் பிரசித்தி பெற்ற தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடந்தது. இரவில் வானவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெற்று மதுரைமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.மதுரை நகர விழாக்களில் முக்கியமானது தெப்பத்திருவிழா. வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அன்னையும், சுந்தரேஸ்வரரும் வலம் வந்து அருள் பாலித்தனர்.வானவேடிக்கை: மாலையில் மீண்டும் தெப்பம் உலா வந்தபோது வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான ரூபாய் செலவிலான பட்டாசுகளை,சிவகாசி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் வெடித்தனர். மதுரை நகர வான்வெளியை வெளிச்சப் புள்ளிகளாக்கினர். தெப்பக்குளம் அருகே உள்ள வைகை ஆற்றுப் பாலத்தில்இந்த வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
Sunday, March 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment